Title | : | Vivek, Ashok, Rajesh...! |
Author | : | |
Rating | : | |
ISBN | : | - |
Format Type | : | Kindle Edition |
Number of Pages | : | 87 |
Publication | : | Published August 30, 2019 |
Vivek, Ashok, Rajesh...! Reviews
-
கிரைம் ஆபிஸர் விவேக்கின் சாதூர்யத்தைச் சொல்லும் மற்றொரு கதை தான்.
சில நேரங்களில் குற்றவாளி முன்னெச்சரிக்கையாகத் தான் எதிலும் அகப்பட்டுவிடக் கூடாது என்று புத்திசாலித்தனமாக செய்யும் செயலே அவன் விட்டுச் செல்லும் தடயமாகிறது.
முன்னணி கதாநாயகனாக சாந்தகுமார் சிபாரிசின் மூலம் தன்வசமாக்கிய விருதைக் குடியரசுத் தலைவரிடம் பெறப் போகச் சில நொடிகள் இருப்பதற்குள் கொல்லப்படுகிறான். அதுபோலவே ஊழல் வழக்கில் கைதான முன்னாள் முதலமைச்சர் அப்ரூவராகி உண்மை சொல்வதற்குச் சில நொடிகள் முன்பாக கொல்லப்படுகிறார்.
இருவரின் இறப்பும் ஒன்றுபோலவே இதயவோட்டம் வலுக்கட்டாயமாக நிறுத்தப்பட்டு மரணத்தைத் தழுவினார்கள் என்ற ஒரு விஷயம் மட்டும் ஒத்துப்போக, அதற்குக் காரணம் லேசர் அவர்களின் இதயத்தைத் தாக்கியது தான் என்பது விசாரணையில் முடிவாகிறது.
தன் அரசியல் ஆதாயத்திற்காக ஹோம் மினிஸ்டர் அடாமிக் பவர் ஸ்டேஷன் புதியதாகக் கண்டுபிடித்த லேசரை உபயோகித்ததும் அதன் தலைவரான தீட்சத் போலீஸிடம் மாட்டிக் கொள்ளாமல் இருக்கத் தன்னைத் தானே கடத்துவது போல நாடகமாடியது ஒரு சின்ன சுபாரி பாக்கெட் மூலம் வெளிச்சத்திற்கு வருகிறது.