Title | : | ரூஹ் [Rooh] |
Author | : | |
Rating | : | |
ISBN | : | - |
Language | : | Tamil |
Format Type | : | Kindle Edition |
Number of Pages | : | 308 |
Publication | : | Published November 7, 2019 |
அச்சமயத்தில் கடப்பாவிலுள்ள அமீன் பீர் தர்காவிற்கு இயக்குநர் வசந்தபாலன் அழைத்துச் சென்றார். தர்காவில் அந்த இரவு கேட்ட ஹவ்வாலி பாடல்களும் அதிகால
ரூஹ் [Rooh] Reviews
-
மீதி பக்கங்களையும் நேற்று இரவே படித்துமுடித்துவிட்டேன் . இரண்டாம் பாதி கொஞ்சம் coherent ஆக இல்லாததை போல் உணர்ந்தேன் . பாத்திரங்களை இன்னும் வலுவாக உருவாகியிருக்கலாம் என்று தோன்றியது . முக்கியமான கதாபாத்திரங்கள் தொடர்ந்து முரண்பட்டவண்ணமே இருந்தது ஏமாற்றம். மாற்றங்கள் தான் நிரந்தரம் என்பதை சொல்ல அப்படி அமைத்தாரோ என்னவோ. கண்டிப்பாக நமக்கு தெரியாத வரலாற்று நிகழ்வுகளை சேர்த்து கதை நெய்ததற்காக ஆசிரியரை பாராட்டவேண்டும் . பேரையூரில் மராத்தி குடும்பம், நைஜீரிய மாப்பிளை , மராத்திய கடல் படை, தமிழ்நாட்டில் அரேபிய கலாச்சாரம் இன்னும்பல ....
ஆனால் பாக்தாத்தில் கடல் என்பது பிழை . டைக்ரிஸ் நதிவழியாக கப்பல் பாரசீக வளைகுடாவுக்கு வந்திருக்கலாம். Could have paid attention here.
Over all the book is a hodge podge of Maritime history of trade routes in the Arabian sea, South Tamil Nadu Islamic history, Marathi diaspora to Tamil Nadu, Mysticism, Rumi/Sufism, Societal Taboos, philosophy,coming of age experiences ,Effeminacy,incestuous guilt .......
Nevertheless a very bold work for a Tamil Novel. Kudos to the author for that.
Half Way Point Review
160 பக்கங்களை உட்கார்ந்த இடத்திலலிருந்து படித்துமுடித்திருக்கிறேன். நிறுத்த முடியவில்லை. ரூஹை எந்தவகையில் சேர்ப்பது என்று தெரியவில்லை. லிட்டரரி பிக்சன் ?, ஹிஸ்டாரிகல் பிக்சன் ?, மேஜிக்கல் ரியலிசம் ? ரியலிஸ்டிக் பிக்சன்? இல்லை இவை அனைத்துமா?
திருமங்கலம் என் அம்மாவின் சொந்த ஊர் . எங்கள் குடும்பத்துக்கு பல இசுலாமிய குடும்பங்கள் மிக நெருக்கம். ஆகையால் திருமங்கலத்தின் இசுலாமிய சகோதரர்களின் வாழ்வுமுறை , உணவுப்பழக்கங்கள் அனைத்தையும் மிக நெருக்கமாக அனுபவித்துள்ளேன் . அந்த தெருக்கள் , மனிதர்கள், சந்தனக்கூடு , நோன்புக்கஞ்சி ....
ஆசிரியர் குறிப்பிடும் பல விஷயங்கள் என்னக்கு பால்ய பருவத்து நினைவுகளை கொண்டுவந்தது .
மற்றும் என்னக்கு தெந்தமிழ்நாட்டில் இசுலாமிய வரலாறு தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வம் மிகவும் உண்டு.
இதில் சொல்லப்பட்டிருக்கும் சில விஷயங்கள் இலைமறைக்காய் அன்றாட நிகழ்வுகளானாலும் , நம்மால் பேசப்படாத taboo subjects . அதை சொல்ல ஒரு தைரியம்வேண்டும். மேலோட்டமாக பார்த்தால் merging ஸ்டோரிலின்ஸ் ஆக தெரிந்தாலும் , பல நுட்பமான விஷயங்களை பதித்துவைத்துஇருக்கிறார் ஆசிரியர்.
உளவியல் ,சூபியிசம் , முஸ்லீம் வரலாறு ,coming of age experience ,Effeminacy ...... இன்னும் பல .
முழுவதும் படித்துவிட்டு என்னுடைய கருத்துக்களை இங்கே பதிவிடுகிறேன் .... -
ரூஹ் - இசையின், இறையின் கலப்பு. இந்த இரண்டும் கலந்த ஒன்று தூய்மையான அன்பைத் தவிர வேறு எதை நோக்கியதாக இருந்துவிட முடியும்?
சக உயிர்களிடம் எந்த ஏற்றத்தாழ்வுகளும், வேறுபாடுகளும் இல்லாமல், எதிர்பார்ப்புகளற்ற அன்பைச் செலுத்த முயல்வோம்...
நாவல் பற்றிய YouTube பதிவு:
https://youtu.be/mRIa2U92tio
அவசியம் வாசிக்கப்பட வேண்டிய நாவல். 49 ரூபாய் மட்டுமே.
வாங்க:
https://tinyurl.com/uolqhu2 -
3.5 stars. The beginning of the book made me believe that the story will be about the precious gem brought from Baghdad to an unknown holy place (not revealed) in India, but stolen by the Marathi bandits. However, the story move away from that gem, in fact just touched only at two instances. Disappointed me very much.
Kudos to the author who tried to include many societal issues in one story at a very good pace. However, the author failed to develop the characters with consistent personality. The personality of the characters just change abruptly frequently with no apparent reason.
The book is two parts story and one part philosophy. Some philosophical thoughts of the author were very good and some didn't resonate with me. -
Rooh is a soulful experience! After reading Rooh you will realize that it's time to spread love unconsciously.
Entire review can be read here:
https://thosebittersweetmemories.blog...
The first 30% of the novel was slow, dark and dense but that's the reason it got cooked well! it made the reader to prepare and dwell in it.
The formatting of the Kindle version could have been better.
You can be Jothilingam if you have faced childhood mockery, abusive workplace.
You can be Rabia if you were someone who lifted someone when they were down.
Rooh is a soulful experience! after completion of this book i made a playlist of Sufi songs and Qawwali songs which are setting the mood right
Rooh PlayList
Plot:
Past: Story details how the journey begins with Ahamed who belongs to the past with a mission to guard something very precious and his encounter with the Great Maratha Kind Angre.
Present: We are told about Jothilingam the main protagonist then Anwar and also how Rabia is related to Jothilingam and Anwar.
Quotes From The Book
புத்தகத்திலிருந்து சில மேற்கோள்கள்
"அறிவின் மீது பற்று கொண்டவர்கள் விளக்கைப் போன்றவர்கள். தன்னைச் சுற்றியிருக்கும் எல்லோருக்கும் ஒளியைப் பகிர்ந்தளிக்கும் குணம் அவர்களுக்கு இயல்பிலேயே வந்துவிடுகிறது."
"அறிந்த எல்லாவற்றிலிருந்தும் துண்டித்துக் கொண்ட பிறகான மனிதர்களை மனம் பிறழ்ந்தவர்கள் என்று சொல்வது எப்படி சரியாகும்? "
"ஒவ்வொரு மனிதரோடும் நாம் ஏற்படுத்திக் கொள்ளும் இடைவெளிதான் ஒருவேளை முதுமையா?"
"வாழ்வின் மீதான இச்சைதான் ஒரு மாலுமிக்கு எப்போதும் அவசியம். அந்த இச்சைதான் அவனையும் அவனோடு கப்பலில் பயணிக்கும் மற்���வர்களையும் பாதுகாப்பாய் வைத்திருக்கிறது."
"தேவையின் போது கடந்த காலத்தைய தவறுகளில் இருந்து தன்னைத் திருத்திக் கொண்டு ஒரு மனிதன் வாழ்வை நெறிப்படுத்துவதற்கு பெயர் அனுபவமென்றால், அன்வர் இப்பொழுது அனுபவசாலி."
"அள்ளிக்குடிக்க முடியுமென்பதற்காக மனிதன் கடலைக் குடித்துவிடத் துடிப்பது பேதமை."
"சொந்த ஊர்க்காரர்களிடம் மரியாதையை சம்பாதிக்க ஒரு மனிதன் வேறு ஊர்களுக்குப் பஞ்சம் பிழைக்க போகவேண்டியிருப்பதை துரதிர்ஷ்டமென்றுதான் சொல்லவேண்டும்."
"எப்படியும் தளைத்து விடவேண்டுமென்கிற நம்பிக்கையைப் பற்றிக் கொண்டிருக்கும் செடிகளுக்கு மழையே ஜீவநீர்."
"இதில்லாமல் வாழ இயலாதென்கிற தேவைக்கும், இதற்காகத்தான் வாழ்கிறோம் என்கிற ஆசைக்கும் அப்பாற்பட்டது பேராசை. வாழ்வை கொஞ்சம் கூடுதலாய் மேம்படுத்திக் கொள்வதற்கான போராட்டத்தில் மனிதர்கள் இந்த பேராசைகளிடம்தான் ஒவ்வொரு முறையும் தோற்றுப்போகிறார்கள்."
"வெறுப்பதை விடவும் ஒருவரை நேசித்தல் எளிது, தன்னால் நேசிக்கவே முடியாதென மனம் சொல்லும் போது அமைதியாக ஒதுங்கிச் செல்லுதல் அதனினும் எளிது."
"பாதுகாப்பு முக்கியமெனில், கரையில் நில் பொக்கிஷம் வேண்டுமென்றால், கடலுக்குள் செல்." - சூஃபி கவிஞர் சா’அதி.
"கடல். கடலுக்குள் கலந்த பிறகு உபநதிகளைப் பற்றி ஒரு வார்த்தையும் தேவையில்லை." -
கட்டற்ற அன்பின் பிரவாகம் ரூஹ்...
நாவலின் ஆரம்பரம் ஏர்வாடியில் இருக்கும் சயீத் இப்ராஹிம் ஒலியுல்லாவின் தர்ஹாவில் இருந்து ஆரம்பிக்கிறது...அடுத்தடுத்த அத்யாயங்களில் கதை 300 வருடங்கள் பின்னோக்கி சென்று அரபிக் கடலில் மதினா என்னும் கப்பலில் பாக்தாத்லிருந்து இறையுணர்வாளர்கள் பயணித்த கப்பலின் மாலூமியான அஹமத் என்கிற கதாப்பாத்திரம் எதிர் கொள்ளும் இன்னல்கள் மற்றும் கடற்கொள்ளையினால் பறிக்கப்பட்ட அறிய பொக்கிஷத்தினிடமிருந்து கதை முன்னோக்கி பயணிக்கிறது!
விதியின் விளையாட்டல் அந்த பொக்கி���ம் ஒரு நாடோடி குழுவிடம் போய் சேர்கிறது...அதன் பிறகு இந்த நாடோடி குழுவின் வம்சாவளியில் வரும் நாயகன் ஜோதிலிங்கத்தின் வாழ்க்கையில் நடக்���ும் நிகழ்வுகளின் அழகிய எழுத்துச் சித்திரம் தான் ரூஹ்...
கதையின் முக்கிய கதாபாத்திரங்கள் ஜோதிலிங்கமும், ராபியாவும்...பெரும்பான்மையான ஆண்களின் ஒரு Extended Version தான் ஜோதி என கூறத் தோன்றுகிறது...ஆனால், அவனின் உடல் நளினத்தால் அவன் எதிர்கொள்கிற அவமானங்களும், ஒதுக்குதல்களும் அவனை அதீத காயங்களுக்குள்ளான ரூஹ் (ஆன்மா) ஆக மாற்றுகிறது... அப்படியான ஜோதியின் வாழ்வில் வந்து ஆற்றுப்படுத்தும் தேவதை தான் ராபியாக்கா...
அதீத காமத்தினால் ஜோதி சந்திக்கும் மனச்சிக்கல்களை எல்லாரும் ஒரு கட்டத்தில் கடந்து வந்திருப்போம்...அதனால் ஜோதிக்கு ராபியாவின் மேல் உண்டான காதலும்... ராபியா, ஜோதியை எவ்வளவு தான் விலக்கி விட்டாலும்...எதையும் எதிர்பாராத தூய அன்பும் அவளின் தாய்மையும் எப்படி ஜோதியை மீட்டெடுக்கிறது என்பதை உணர்வுப்பூர்வமான கதை சொல்லலின் மூலம் நமக்கு உணர்த்தியிருக்கிறார் லஷ்மிசரவணகுமார்...
ஒரு படைப்பினை வாசிப்பதன் மூலம் வாய்க்கும் அகவயமான உணர்வுகளும், சிந்தனை மாற்றங்களும் மிகவும் அற்புதமான ஒன்று! அந்த வகையில் ரூஹ் வாசிப்பவர்களின் மனதிற்குள் அன்பின் விதைகளை தூவி அற்புதம் செய்துவிடுகிறது! ❤❤ -
It started fantastically. இன்னும் கொஞ்சம் பொறுமையாய் யோசித்து எழுதி இருந்தால் classic ஆகியிருக்கும். I wish to see this as web series.
-
Ahmed & Jothilingam stories were wonderfully connected ☺️
அஹமத் - ஜோதிலிங்கம் //அவனுடல் இப்பொழுது ஒளியாய் மாறியிருந்தது. கடல் நிறம் மாறி பச்சையாய் பூக்க, வலுத்துப் பெய்த மழை நீர்த்துளிகளும் பச்சை நிறத்தில் தெறிக்க அந்த ஒளி கடலோடு கலந்து கடலானது. கடல் ஒளியானது.// 😍 -
சென்ற வாரம் நான் படித்த இரண்டு புத்தகங்கள் வெகுவாக என்னை பாதித்தது... முதலில் படித்த புத்தகம் ‘அருணா இன் வியன்னா’ - மருத்துவர் அருணாவும் அவரது இரண்டு தோழிகளும் யூரோப்பிற்கு குடும்பத்துடன் செல்லாமல், தோழிகள் மூன்று பேர் மட்டும் சென்று வந்த ஒரு ரகளையான பயணத்தைப் பற்றி தன்னுடைய அனுபவத்தை நகைச்சுவை கலந்த ஒன் லைனர்களுடன் சிறப்பாக தந்திருக்கிறார்... கொஞ்சம் தவறினாலும் ஒரு நீண்ட Facebook பதிவாக மாறிவிடும். ஆனால் ஒரு நல்ல பயண நூலாக மாற்றுவது அவரின் எழுத்து நடை, அதன் வழியாக நம்மையும் உடன் அழைத்து செல்லும் விதம். நெற்றிக்கண் படத்தில் வரும் கவுண்டமணி , இங்க இருக்கு மருதமலை அதையே நான் இன்னும் பாக்கல என்று சொல்வதை போல் நானும் பெரிய பயணம் எதுவும் சென்றதில்லை.. நண்பர்களுடன் ஏதாவது ஒரு பயணம் போக வேண்டும் என்று தூண்டிய ஒரு எழுத்து... இவரின் பிற எழுத்துக்களை படிக்க ஆவலாக உள்ளது...
இரண்டாவது புத்தகம் - லஷ்மிசரவணகுமார் எழுதிய ரூஹ் - முதலாவது பயணத்தின் கதை என்றால் ரூஹ், வாழ்க்கைப் பயணத்தை பற்றிய கதை... கதை ஆரம்பிக்கும் போது இருக்கும் கதாபாத்திரங்கள் முடியும் போது வேறு ஒன்றாக மாறுகிறது.இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் சமகாலத் தன்மை கொண்ட எழுத்து இருக்கும் ஆனால் ஆழமிருக்காது, அதை பொய்யாக்கும் விதமாக லஷ்மி சரவணகுமார் தனது ரூஹ் நாவலின் மூலம் ஒரு சிறந்த வாசிப்பனுபவத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.. முதல் சில அத்தியாயங்களை படிக்கும் போதே நம்மை கதைக்குள் இழுக்கிறது.. லஷ்மிசரவணக்குமார் எழுதிய நாவல்களில் முதன்மையானதாக இதை தயங்காமல் சொல்லலாம்.. அவரின் கதை வடிவம் உரையாடல்கள் குறைவாக இருக்கும், கதை சொல்லல் மற்றும் எண்ண விவரணைகள் அதிகமாக இருக்கும். இதுவே அவரின் பலம் மற்றும் பலவீனம். அவரின் எழுத்தில் நான் கவனித்தது, வாசனைகள் ஒரு முக்கிய அங்கமாக எல்லா நாவல்களிலும் இடம் பெறுகிறது. உப்புநாய்களில் வரும் நாயின் வாசனையை எழுத்தில் உணரலாம். அதேபோல் ரூஹ் வில், பல வாசனைகளின் மூலம் உணர்வுகளை கடத்துகிறார். நாவலை பற்றி எழுதுவதற்கு நிறைய இருக்கிறது..இந்த வருடத்தின் முக்கியமான நாவலாக இந்த நாவல் இருக்கும். இரண்டு நாவல்களுமே Must read வகையைச் சேர்ந்தது... Do read👍 -
வெறுப்புகளைத் தாண்டிய கட்டற்ற அன்பே ரூஹ்
-
சூஃபியிசத்தின் ஒளி கொண்டு நிபந்தனைகளற்ற அன்பைத் தேடுமொரு காலப்பயணம். வாசித்து முடிக்கையில் 'நாமெல்லாம் ஒரு துளிக்குள் ஒளிந்திருக்கும் பெருங்கடல்' என்பது உண்மை தானோ என எண்ணத் தோன்றுகிறது.
-
Mesmerising Read
Rooh is mesmerising. Lakshmi Saravanakumar has a magical way of storytelling that makes the story of two ordinary people Jothi and Rabia, extraordinary.
The novel absorbs us slowly into its world but connects us so deeply with its characters that we never want to come out of it. At the end, along with Jothi and Rabia, we too realizes that love is the last resort. Must read. -
அவளின் நினைவென்பது பற்றி எரியும் காட்டுத்தீயின் உக்கிரம், சதையும் எலும்பும் சமாதானமாகாத களிப்பின் திரட்சி, ஒரு வெய்யில் நாளின் நீண்ட தாகம். அவளென்பது யாதுமான பேருரு. - நாவலிலிருந்து -
இந்த நாவலில் வரும் "ஜோதி" யுடன் அனைவரும் தம்மை இணைத்துக்கொள்ளும் ஏதேனும் ஒரு நிகழ்வு கட்டாயம் இருக்கும். ஆனால் "ராபியா" போல் ஒரு தேவதை ���ல்லோருக்கும் அமைந்து விடாது. வேண்டுமானால் இதை படித்த பிறகு நமது பக்கத்தில் இருக்கும் ராபியா அக்காக்களை தேடி பார்க்கலாம்.
ராபியா அக்காவின் கடிதம் - என்ன சொல்வது என்று தெரியவில்லை - அத்தனை நெகிழ்ச்சியான ஒரு உணர்வை தந்தது.
நாவல் முழுக்க எங்கே இருவரையும் பொருந்தா காதலுடன் ஆசிரியர் இணைத்துவிடுவாரோ என்று மிகவும் பதறியபடியே வாசித்தேன். அனால் ஆசிரியர் அதற்கும் மேலே சென்று பெரும் அன்புடன் இச்சை கலக்காத பேரன்புடன் முடித்துள்ளார்.
அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நாவல். வாசித்து முடித்த பின் உலகை,சக மனிதனை பார்க்கும் உங்கள் எண்ணங்களில் சிறு அதிர்வை கட்டாயம் ஏற்படுத்தும்.
நாவலாசிரியர் லக்ஷ்மி சரவணகுமார் அவர்களை இதற்காக எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
------------------------------------------------------------------------------
spoilers alert
என்னை பொறுத்தவரை இதில் வரும் ரத்தினக்கல் ஒரு பேராசையின் குறியீடோ என்று தோன்றுகிறது. (ஆசிரியரின் பார்வை வேறு மாதிரியானது). -
கதைக்களம் நடக்கும் பேரையூர் என் நண்பனின் ஊர்
பல முறை சென்றிருக்கும் இடம் அது.
அடுத்த முறை செல்லும்போது என் நண்பரகள் மட்டும் இல்லாமல் ஜோதியும் ராபியாவும் என் நினைவில் வருவார்கள்.
பேராசை மனிதனுக்கு வரக்கூடாது, அப்படி வந்து விட்டால் அது அவனது வாழ்க்கையை பொறட்டி போட்டுரும். இந்த கதையில் வரும் கதாபாத்திரங்களும் நாகமாகு அது தான் உணர்த்துகிறது.
ஜோதி ராபியா அன்பு தாய்மைக்கான புனிதத்தை வெளிப்படுத்தியது. -
‘கதைகள் மக்களின் வாழ்க்கையிலிருந்துதான் புத்தெழுச்சி பெறுகின்றன. அவர்கள்தான் வாழ்வதற்கான புதிய அறங்களைக் கற்றுக்கொடுக்கின்றார்கள்’.. ரூஹ் முன்வைக்கும் அறம் கட்டற்ற அன்பு.. கூடவே கொஞ்சம் வரமும் சாபமும்..
-
It's not exactly a review rather a collection of words that moved me or made me say 'அட!' or made me surrender with the word 'ஆமால்ல!!' while reading the book.
The author had sown lots of simple yet powerful words throughout the book. The beauty is it is not forcibly thrown in that sticks out but its brought out in a normal conversation between the characters or while expressing their emotions.
Those that touched me:
பிரார்த்தனைகள் நிரம்பிய மனிதர்களை கவலைகள் ஒருபோதும் நெருங்குவதில்லை.
நிக்காஹ் என்பது ஒரு பெண்ணின் புறவயமான அடையாளத்தை வேண்டுமானால் மாற்றலாம். ஆனால் அகத்தில் அவள் எப்போதும் தனித்துவமானவளாகவே தகிக்கிறாள். பெண்களின் ஆழ் மன நாட்டங்களை, ஆளுமையைப் புரிந்து கொள்ள பெரும்பாலான ஆண்களால் முடிவதில்லை. தன்னோடு திருமண உறவிற்குள் வரும் ஒரு பெண் முழுமையாக தனக்குரியவளாய் ஆகிறாள் என்கிற ஆண்களின் அகந்தை அந்தப் பெண்களின் ஆற்றலைத் தெரிந்து கொள்ளும்போது தோற்றுப் பின் வாங்குகிறது.
தேவையின் போது கடந்த காலத்தைய தவறுகளில் இருந்து தன்னைத் திருத்திக் கொண்டு ஒரு மனிதன் வாழ்வை நெறிப்படுத்துவதற்கு பெயர் அனுபவமென்றால், அன்வர் இப்பொழுது அனுபவசாலி.
நன்மைகளை வேண்டி நிற்கிறவர்களுக்கு அவர்கள் மனம் போலவே அமைந்துவிடுதல் வரம்.
பயப்படத் துவங்கும் மனிதன் அதிலிருந்து மீள்வதற்கு பதிலாக ஒன்றிலிருந்து இன்னொன்றிற்கென தனது பயங்களை அதிகமாக்கிக் கொள்கிறான்.
பசியும் வறுமையும் தேவைகளும் தான் மனிதர்களை சக மனிதர்களோடு மிக எளிதில் பிணைத்துவிடுகிறது.
மனிதர்களை அல்லாமல் அவர்களின் இயல்பை கவனிக்கும் மனிதர்களின் கேலிகளில் இருந்து தப்பிக்க எத்தனை வலிமையான இதயம் கொண்டவர்களாலும் முடியாமல் போகிறது.
இழிவுபடுத்துகிற எல்லோருக்கும் ஒரே முகம்தான். சாத்தான்களால் படைக்கப்பட்டவர்கள். சக மனிதனின் அவமானங்களைக் கண்டு சிரிக்க முடிந்த மனிதனின் மனதிற்குள் தீமையின் அடையாளங்களே தேங்கியிருக்கிறது.
மனிதன் தன் சந்தோசங்களை அனுபவிக்க முதலில் அவனுக்கு பாதுகாப்பானதொரு சூழல் தேவைப்படுகிறது,
தேவதைகள் எத்தனை முகங்களிலிருந்து சூதுவாது அறியாத குழந்தைப் பருவத்தைத் திருடி இந்தப் பயலை படைப்பதில் செலவிட்டிருக்குமோ? எல்லோரையும் எரிச்சல்படுத்திய அவனின் நளினமும் மென்மையான குரலும் தான் இவளுக்கு பிடித்திருந்தது.
மனித உயிரின் இயக்கத்திற்கு ஈரமிக்க சொற்கள்தான் உரங்களாகின்றன.
"சொற்கள் தான் உலகம், சொற்கள் தான் வாழ்க்கை, சொற்கள் தான் விடுதலை, சொற்கள் தான் மனித வாழ்வின் அடிப்படை ஆன்மா...
சொந்த ஊர்க்காரர்களிடம் மரியாதையை சம்பாதிக்க ஒரு மனிதன் வேறு ஊர்களுக்குப் பஞ்சம் பிழைக்க போகவேண்டியிருப்பதை துரதிர்ஷ்டமென்றுதான் சொல்லவேண்டும்.
இதில்லாமல் வாழ இயலாதென்கிற தேவைக்கும், இதற்காகத்தான் வாழ்கிறோம் என்கிற ஆசைக்கும் அப்பாற்பட்டது பேர���சை. வாழ்வை கொஞ்சம் கூடுதலாய் மேம்படுத்திக் கொள்வதற்கான போராட்டத்தில் மனிதர்கள் இந்த பேராசைகளிடம்தான் ஒவ்வொரு முறையும் தோற்றுப்போகிறார்கள்.
தீமைக்குத் தீமை செய்கிறவர்களை விடவும் நன்மைக்குத் தீமை செய்கிறவர்கள் தான் நம்மை சூழ்ந்து வாழ்கிறார்கள்.
அசாதாரண அனுபவம் என்பது எங்கோ வானத்திலிருந்து குதிப்பதல்ல. நம் அன்றாட வாழ்வில் சாதாரண அனுபவங்களிலேயே கிடைப்பதுதான். ந�����்தான் கவனிக்கத் தவறவிடுகிறோம். அசாதாரணமானது என்பது ரொம்ப தூரமானது என்றும், சிக்கலானது என்றும் நாம் நினைக்கிறோம். அதனால் நமக்கு வெகு அருகிலேயே இருக்கும் அதைப் பார்க்கத் தவறிவிடுகிறோம்.
“என்னடா பேசற? அந்தாளு வந்து அப்பிடி பேசினான்னா அதுக்கு காரணம் இருக்கு. பத்து பேருக்கு வட்டிக்கு குடுத்து வாங்கறவனுக்கு குடுத்த காசு திரும்பி வரலன்னா கோவம் வரத்தான் செய்யும். அவன் கெட்டவனா இருந்திருந்தா இத்தன காலம் வசவோட போயிருக்க மாட்டான். நாலு பேர கூட்டியாந்து தகராறு பண்ணி இருப்பான். வெறுப்புல பேசுன வார்த்தையெல்லாம் பேசுனவங்க வாழ்க்க முழுக்க சுமந்துக்கிட்டுத்தாண்டா இருக்காங்க. இம்புட்டுக் காசு பணம் இருந்து ஏன் அவனும் இங்க வந்து சட்டி எடுக்கனும். பக்தின்னு நெனைக்கிறியா? நான் அறியாம செஞ்ச பாவத்த எல்லாம் மன்னிச்சிடுன்னு வேண்டிக்கத்தான். யாரையும் இவ்வளவு வெறுக்காத ஜோதி. வெறுப்பு முதல்ல உன்னத்தான் சீரழிக்கும். இப்ப தேடிவந்து நம்மளப் பாத்து மரியாதையா பேசி சிரிச்சுட்டுப் போறானே இதான் அந்தாளோட நெஜம். இது புரிஞ்சுடுச்சுன்னா உனக்குள்ள இருக்க வெறுப்பு போயிரும். உன்னய வெறுக்கறவங்களையும் நீ நேசிக்க பழகுடா.”
வெறுப்பதை விடவும் ஒருவரை நேசித்தல் எளிது, தன்னால் நேசிக்கவே முடியாதென மனம் சொல்லும் போது அமைதியாக ஒதுங்கிச் செல்லுதல் அதனினும் எளிது.
அற்புதங்கள் மனிதர்களின் கண்களுக்கு அகப்படாமலிருப்பதற்கான காரணங்களை இப்பொழுது அவனால் புரிந்து கொள்ள முடியாது. ’மனதில் பேராசைகளை மலையென குவித்து, நினைத்ததை அடைவதற்காக எந்தவிதமான வன்முறைகளையும் செய்யச் சொல்லும் குரூரத்தைதான் முதலில் விதைக்கும். பேராசை கொண்ட மனிதனிடம் நிதானமும் சிந்தனையும் தொலைந்து போகும். அதனாலேயே ஒருமுறை அற்புதங்களைத் தேடி அலையத் துவங்கும் மனம் ஒருபோதும் அதிலிருந்து தன்னை மீட்டுக் கொள்வதில்லை.
தன்னைத் தானே மகிழ்ச்சியாய் வைத்துக் கொள்ளத் துவங்கும்போதுதான் பிறருக்குத் தீங்கு இழைப்பது குறித்து எண்ணாதவனாகவும் தானென்ற அகங்காரம் நீங்கியவனாகவும் இருக்கிறான். -
லஷ்மி சரவணகுமாரின் "ரூஹ்" புத்தகம் பற்றிய அறிமுகம் / விமர்சனம் / மதிப்புரை
ஓய்ந்து போன ஓர் புயலின் முடிவில் எஞ்சியிருக்கும் கனத்த மௌனத்தை தாங்கிய மாலைப் பொழுதில் தான் ரூஹ் எனும் இந்நாவலை வாசிக்க தொடங்கினேன். ரூஹை எங்கிருந்து தொடங்குவது, யாரிடமிருந்து தொடங்குவது அல்லது யாரிடமிருந்து தொடர்வது, யாருக்கு கடத்துவது என்ற கேள்விகள் மூலம் ஜன்னத்தின் ஸ்பரிசம் மிக்க கரங்களை பிடித்தவாறு ஒருவாறாக மாறியிருந்த ஜோதியை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்த ராபியைப் போலவே பேச வார்த்தைகளற்று நிற்கிறேன்.
மனிதர்களின் கசடுகளை எப்போதுமே சுமந்து நிற்கும் நிலத்தை கடல் என்றைக்குமே விமர்சனத்தோடுதான் நோக்குகிறது. நிலப்பரப்பின் அதீத பாவங்களுக்காகத்தான் கடல் அவர்களை அணுகுவதில்லை.., மாறாக ஆர்ப்பரிக்கிறது. இக்கதையில் வரும் அஹ்மதும், ஜோதியும் தங்களது அவமானங்களை, வலிகளை, இயலாமைகளை, பேராசைகளை, தீர்த்துவிட வேண்டுமென துடித்துக் கொண்டிருக்கும் பட்ட கடன்களை எல்லாவற்றையும் இந்நிலப்பரப்பிலிருந்து விலகி கடலுக்குத்தான் ஒப்புக் கொடுத்தார்கள். கடலின் உப்பிற்கு எல்லாவற்றையும் கரைக்கும் அதீத திறன் இருக்கிறது. அவை எந்தபாரபட்சமும் இன்றி அவற்றை கரைத்து அஹமதை போல , ஜோதி���ைப் போல கரைத்து காற்றில் இரண்டறக் கலக்க வைத்துவிடுகிறது..
எனக்கும் நீருக்குமான தொடர்பு அல்லது பரிச்சயம் என் சிறு பிராயத்திலிருந்தே தொடங்கிய ஒன்று. அவை எனை கழுவி சுத்தப்படுத்தியிருக்கிறது. என் உயிரின் கடைசிக்கு முந்தைய மூச்சை இந்நீர் அறியும். மற்றொரு முறை கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருந்த என்னை பலவந்தமாக பிடித்து தள்ளியதும் இந்நீர்தான். என் அவமானங்களை , வலிகளை, கஷ்டங்களை , இயலாமைகளை எல்லாம் இந்நீரோடும், பின் இரவின் பிரார்த்தனைகளோடு மட்டுமே நான் பகிர்ந்திருக்கிறேன்.
பிரார்த்தனைகளின் போதோ, நீருக்கு அடியிலோ எனது புலம்பல்கள் அரங்கேறும் போது பின் இரவின் இருளில் கருணையெனும் சிறகு எனை அணைத்துக் கொள்வதாய் உணர்ந்து கொள்வேன். நீரின் அடியில் புனித மிக்க ஓர் ஊற்று பீறிடெத்து எனை கழுவி விடுவதாய் நினைத்துக் கொள்வேன். அதன் பின்பான தீர்க்கமான அமைதியை மிகவும் நேசிக்க துவங்குவேன். இப்படித்தான் நீரும்.., நானும்.
பெரும் வலிகளோடு வரும் மனிதர்களுக்கு ராபியா தனது கரங்களை அவர்களது தலையின் மேல் வைத்து பிரார்த்திக்கும் போது ஜோதிக்கும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும்.
மாலுமியான அஹ்மதின் சாகசங்களும், நேர்த்தியான பயணங்களும், முதிர்ந்த அனுபவங்களும் எனக்கு Road to Makkah எனும் நூலில் அதன் ஆசிரியர் லியோ போல்டுவில் எனும் முஹம்மது அஸதை நினைவுக்கு கொண்டு வந்தன.
ஞானிகளுக்கு பாக்தாதின் கலீபா அளித்த பட்டுத் துணிகளால் ஆன மரப்பேழையில் வைக்கப்பட்ம பொக்கிஷம் போல இக்கதையில் சில பொக்கிஷங்கள் உண்டு. அதனை பொக்கிஷமாகவே கருதி கடந்துவிட வேண்டும். ஜோதியைப் போல.., சிலபோது அன்வரைப் போல அல்லது அந்த ஆங்ரே கனோஜியைப் போல பலவந்தமாக திறந்து பார்க்க வேண்டுமென அடம்பிடித்தால் அது உங்களை வேறொரு மீள முடியாத துயரங்களுக்குள் அழைத்துச் செல்லும்.
ரூஹ் எனும் இந்நாவலின் முற்றுமுழுதான சிறப்பே பேரன்பு ஒன்றுதான். நிபந்தனைகளற்ற அப்பேரன்பு, நவீன அன்பின் வரையறுக்குள் அடக்கவே முடியாத ஓர் பேரன்பு, ஆன்மாவின் அடி ஆழத்திலிருந்து ஊற்றெடுக்கும் ஓர் பேரன்பு. அது ராபியாவிலிருந்தே வெளிப்படுகிறது. ராபியா யார் என நீங்கள் வினவினால் அவள் ஒருவேளை பாதுஷா நாயகத்தின் பிரதிநியாக இருக்கலாம்.., அல்லது ராபியாவே கூட கருணையை படைத்து கருணை எனும் சிறகின் மூலம் உலக மக்களை அனைத்து கொள்ளும் அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லா வல்ல இறைவனின் பிரதிநிதியாக கூட இருக்கலாம். அன்பை பரிசளிக்கிற ஓர் ஆன்மாவைப் பற்றித்தான் ரூஹ் முழுக்க பேசுகிறது.
"ரூஹ்" தரும் அன்பு என்பதை அடைவதற்கான நெடும்பயணம் என்பது ரம்மியமானது. கட்டையனின் வழித்தடத்தை பிடித்து காடுகளுக்குள் பயணித்த ஓர் இரவு பயணித்தை பற்றி மட்டுமல்ல நான் குறிப்பிடுவது. பெருத்த அவமானங்களோடு, இழப்புகளோடு, இயலாமைகளோடு கால்கள் ஓடாய் தேய்ந்து , அலைந்து திரிந்து, வருத்திக் கொண்டு, உலகம் எனும் அற்பத்தை மறந்து சூரியன் மறையத் தொடங்கும் ஓர் மாலை வேளையில் கடலில் கரைந்து விடுகின்ற பொழுது கடலோடு சேர்ந்து நிலமும், வானும் நட்சத்திரங்களும், மீன்களும், நிலவும் சேர்ந்து ஒளிர்கின்ற பச்சை நிறம் தான் ரூஹ்.. அந்த பசுமையான நிறம் தான் ரூஹ்.
ரூஹின் ஆசிரியர் லஷ்மி சரவணகுமாரை கொமேரா நாவலின் வழியாக சிறிய அறிமுகம் உண்டு. கொமேரா உண்டுபண்ணிய , பேசிய , காட்சிப்படுத்திய மனிதர்களும், ஆன்மாக்களும், வலிகளும் வேறொரு தளம். அதனிலிருந்து அப்படியே ரூஹை அதுவும் இஸ்லாமிய கதைகளங்களை அவரால் எப்படி வரைய முடிந்தது என ஆச்சர்பட்டு நிற்கிறேன். லஷ்மி சரவண���்குமாரின் தேடலும், முயற்சியும், இலக்கிய படைப்புகளையும் வெற்றியடைய வாழ்த்துக்களோடு பிரார்த்தனைகளையும் உரித்தாக்குகிறேன்.
"ர��ஹிற்காக " உடன் இருந்து உழைத்த லஃபீஸ் நானா, நிஷா மன்சூர், அர்ஷியா உள்ளிட்ட தோழர் குழுமத்திற்கு நன்றிகளையும், வாழ்த்துக்களையும், பேரன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
புத்தகம் : ரூஹ்
ஆசிரியர் : லஷ்மி சரவணக்குமார்
பக்கங்கள் :189
விலை : ₹ 250
பதிப்பகம் : ஜீரோ டிகிரி பதிப்பகம்
:அஹ்மது யஹ்யா அய்யாஷ் -
"ரூஹ்
(ஏழைகளிடமிருந்து அவனுடைய ராட்சகனுக்கு )
ஆசிரியர் : லஷ்மி சரவணகுமார்
நாவல்
189 பக்கங்கள்
எழுத்து பிரசுரம்
லஷ்மி சரவணகுமார் - ஒரு ஆச்சர்யம் தான். இளம் வயதிலே எழுத தொடங்கி இன்று சமகால எழுத்துலகில் தனக்கென ஓர் இடமும் ஒரு வாசகம் வட்டமும் தன் எழுத்துக்களால் உருவாக்கியுள்ளார். அவர் கூறுவது போல தன் பால்யத்தில் தான் கடந்து வந்த பாதை தனக்கு இன்னும் ஆயிரம் ஆயிரம் கதைகளை தர காத்துக்கிடக்கின்றன. ஆம், உண்மைதான். ஒவ்வொரு எழுத்தாளனும் தனக்கு தெரிந்தோ தெரியாமலோ தங்களின் ஒரு பகுதியை தங்கள் கதையில் விட்டு சென்றுவிடுகின்றனர். ஆழ்ந்த வாசகன் ஒருவன் அந்த கதையில் அந்த எழுத்தாளன் எங்கு ஒளிந்திருக்கிறார் என்று நிச்சயம் அறிவான். லடஷ்மியும் அப்படிதான், இவரின் உப்பு நாய்கள் கதையில் இவரின் சென்னை வாழக்கை இவருக்கு கொடுத்ததை அறிந்துகொண்டேன். லஷ்மி சரவணகுமார் இந்த சமூகத்தின் ஒரு முகம். இலக்கியம் என்ன செய்யும்? என்று வினவும் பலரின் கேள்விகளுக்கு லஷ்மி சரவணகுமாரின் வாழ்க்கையும், அவரின் மாற்றங்களும் சேர்ந்து அவர் ஒரு வாழும் உதாரணம்.
ரூஹ் - உயிர் அல்லது ஆத்மா என்று அர்த்தம். எவ்வளவு பொருத்தமான ஒரு தலைப்பை தாங்கி நிற்கிறது இந்த நாவல். நாவல் மூன்று வெவ்வேறு காலங்களிலும் களங்களிலும் கதை தொடங்கினாலும். ஜோதிலிங்கம் - ராபியா என்ற இரு உன்னதமான ஆத்மாக்களை சுற்றியே கதை சுழல்கின்றது. மதுரைக்கு அருகே பேரையூர்-இல் மராத்தியதிலிருந்து புலம்பெயர்ந்த தோல்பாவை கலைஞரின் மகனாக பிறந்து வளரும் ஜோதிலிங்கம், பெண்ணிற்கான நளினம் அவன் உடல் மொழியில் தெரிவதால் அவன் பெற்றோர் தொடங்கி ஊர் மொத்தமும் அவனை பரிகாசம் செய்ய அவனுக்கு ஆறுதல் தர அந்த ஊரில் மிஞ்சி இருக்கும் ஒரே ஆத்மா ராபியா மட்டுமே.
ராபியா - மேலோட்டமாக பார்த்தால் அவள் அன்வரை மனமுடித்து பேரையூர் குடிப்பேயர்ந்த ஒரு சராசரி குடும்பப்பெண். ஆனால் அது மட்டுமல்ல அவள் . அமர்வதற்கு கூட கிளைகள் இன்றி சுற்றிதிரியும் பறவைகளுக்கு தன் கரங்களை நீட்டும் ஒற்றை கிளை போலத்தான் ராபியா . மகள், மனைவி, அன்னை, அக்கா, தோழி, இன்னும் இதுபோல எத்தனையோ உறவுகளின் உருவமாக ராபியா . எப்படி இவளால் இத்தனை பாத்திரங்களை தன் ஒரே வாழ்வில் தாங்கி நிற்க முடிகிறது? அவள் ஒரு புதுமைப்பெண் தான். இவ்வுலகிற்கு அவள் அதனை அரைக்கூவலிட வேண்டியதில்லை, அவள் தன் முன்னெடுப்பை ஜோதி மற்றும் அன்வர் என்ற இரு ஆண்மகன்களின் வாழ்க்கையின் மூலம் இந்த உலகத்துக்கு உணர்த்திவிட்டாள். ஆனால், ராபியாவுக்கு தான் இந்த கதையில் அவ்வளவு நெருக்கடிகளும் வந்து சேர்கின்றன. இந்த இடத்தை தான் என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. மனதளவில் கூட யாருக்கும் தீங்கு நினைக்காத அவள் தன் வாழ்க்கையில் கண்டது அனைத்துமே இருள் சூழ்ந்தவை மட்டுமே. என்ன செய்வது அங்குதான் எதார்த்தமும், ஆண் வர்கத்தின் ஆணவமும், சமூகத்தின் உண்மை முகமும் வெளிப்படுகிறது. ராபியா போல நம் நாட்டில் இன்னும் எத்தனை எத்தனை பெண்கள்?
லக்ஷ்மி சரவணகுமாரின் வழக்கமான அனைத்து சாரம்சங்களும் இந்த கதையிலும் இருந்தாலும், இந்த கதை அவரின் படைப்புகளில் இருந்து தனித்து நிற்கிறது. ஏனென்றால் இதில் அவர் வாழ்க்கையின் எதார்த்ததை எந்த ஒரு சாயமும் பூசாமல் வாழ்க்கை போகும் போக்கில் அதனை படம்பிடித்து காட்டியுள்ளார். புனைவுகளை அகற்றிவிட்டு மிச்சம் இருப்பதை தொகுத்தால் இது ஒரு சிறந்த தத்துவ புத்தகமாக மாறிவிடும். நம் காலத்தில் நாம் மறந்து போன, பார்க்க தவறிய கதைச்சொல்லிகளையும், தோல்பாவை கலைஞர்களையும் கதைக்குள் கொண்டு வந்து நினைவூட்டியது பாராட்டுக்குறியது. வாழ்க்கை எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும் எல்லாவற்றையும் கொடுத்துவிடுவதில்லை. இல்லாத ஒன்றை தேடி இல்லாமல் போவதை விட இருப்பதை தொலைத்து விடாமல் இந்த வாழ்க்கையை நாம் வாழ்ந்து பார்ப்போம். ஆசிரியர் சொல்வது போல "பிடிக்கவில்லை என்பதற்காக மனிதன் வாழாமல் இருக்கமுடியுமா?"
இந்த வரிகளில் தான் எத்தனை அர்த்தங்கள் இருக்கின்றன!
--இர. மௌலிதரன்.
04-03-2023 -
Lakshmi Saravanakumar
ரூஹ் Rooh:
வெகுநாட்களாக லஷ்மியின் புத்தகங்களை படிக்கவேண்டும் என்று பட்டியலில் வைத்திருந்தேன். அதற்கான சரியான நேரமும் வாய்ப்பும் அமையாமலேயே இருந்தது, ஆனால் அவரை முகப்புத்தகத்தில் பின்தொடர்ந்து பதிவுகளை படித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.
லஷ்மியின் சமீபத்திய நாவலான ரூஹ், தலைப்பை பார்த்ததும் படித்துவிட வேண்டுமென்ற ஆர்வம் தொற்றிக்கொண்டது.
இனி நாவலைப்பற்றி:
நாவல்முழுக்க “ராபியா”தான் , ராபியாவைப்போன்ற தேவதைகள் நிஜ உலகில் அரிது ❤️.
ராபியா, ஜோதிக்கு எழுதிய கடித்ததின் முதலெழுத்தை படித்ததும் உடைந்துவிட்டேன். “கண்மணி” இந்த ஒரு வார்த்தையில் மொத்த பாவங்களும் கழுவப்பட்டுவிட்டது. “நீ என் மீது கொண்டிருந்த உணர்ச்சிகள் உனக்கு இன்பத்திற்கு பதிலாக துன்பத்தையே தந்திருக்கக் கூடும்.” என்னவொரு கணமான வரிகள். அடுத்ததாக, திரும்பி வா, உன்னை என் தாய்மையின் சிறகுகளுக்குள் அரவணைத்துக் கொள்கிறேன். அன்பு காலமற்றது கண்மனி. முழுமையானது. திரும்பி வா. நாவலை படித்துக்கொண்டிருக்கும் எனக்கும் அந்த அரவணைப்பு தேவைப்பட்டது.
இந்த நூலை நாம் வெறும் நாவல் என்றுமட்டும் கடந்துவிட இயலாது. இது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட தரமான திரைக்கதை, இது ஆழ்மனதின் உணர்ச்சிகள், காலங்காலமாக ஒருவரின் இயலாமையை அல்லது குறைகளை உதாசீணம் செய்யும் மனிதர்கள், சபிக்கப்பட்டவர்களின் ஆன்மாவை அலசும் முயற்சி மற்றும் அந்த ஆன்மாக்களை அரவணைக்கும் தேவதைகள்.
பலதரப்பட்ட வெவ்வேறு மனிதர்களின் சிக்கலை, மிக லாவகமாக எழுத்தாளர் உள்வாங்கி எளிய வாசகனுக்கும் புரியும்படியாக படைத்திருக்கிறார்.
//இழிவுபடுத்துகிற எல்லோருக்கும் ஒரே முகம்தான். சாத்தான்களால் படைக்கப்பட்டவர்கள். சக மனிதனின் அவமானங்களைக் கண்டு சிரிக்க முடிந்த மனிதனின் மனதிற்குள் தீமையின் அடையாளங்களே தேங்கியிருக்கிறது.// இந்த உள்ளுணர்வை எவ்வளவு எளிதாக கூறிவிட்டார்.
//இறைவன் மனிதனை தன்னைப் போலவே உருவாக்கினான் என்பதுதான் இறை நம்பிக்கை நமக்குக் கற்றுத்தரும் செய்தி.// இறைவன் எப்பொழுதும் மனிதர்களையும் தம்மைபோலவேதான் படைக்கிறார், ஆனால் மனிதனின் பேராசையும் சுயநலமும்தான் அவனை வளர்க்கிறது. அதுத���ன் மனிதமின்றி சாத்தான்களாக உலவுகின்றார்கள். ஆதலால் தான் //பிரார்த்தனைகள் நிரம்பிய மனிதர்களை கவலைகள் ஒருபோதும் நெருங்குவதில்லை.//
தாம் //அறிந்த எல்லாவற்றிலிருந்தும் துண்டித்துக் கொண்ட பிறகான மனிதர்களை மனம் பிறழ்ந்தவர்கள் என்று சொல்வது எப்படி சரியாகும்?// உலக வாழ்விலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும் ஒவ்வொரு உயிரும் கடவுளாவர்,
ஒருவேளை முதுமையென்பது ஒவ்வொரு மனிதரோடும் நாம் ஏற்படுத்திக் கொள்ளும் இடைவெளிதான் முதுமையா? அல்லது முதிர்ச்சியா.? . எந்த உயிரிணுமும் இதே கோட்பாடுடன்தான் இந்த உலகில் போராடுகின்றது //தன்னுடைய வாழ்வின்மீதான் இச்சைதான் இந்த உலகை வழிநடத்துபவனுக்கு அவசியம், அந்த இச்சைதான் அவனை சார்ந்தவர்களை காப்பாற்றுகிறது.//
இங்கே //"சொற்கள் தான் உலகம், சொற்கள் தான் வாழ்க்கை, சொற்கள் தான் விடுதலை, சொற்கள் தான் மனித வாழ்வின் அடிப்படை ஆன்மா./ அதையேதான் ஜெமோவும் கூறியிருந்தார், சொற்கள் என்பது அம்பு போன்றது
அது நாவிலிருக்கும்போது ஒன்று, எடுத்து வில்லில்வைக்கும்போது 100, வில்லிலிருந்து புறப்பட்டு தாக்கும்போது 1000. சொற்கள்தான் ஒருவனை உருவாக்குவதும், அழிப்பதும்.
//சொந்த ஊர்க்காரர்களிடம் மரியாதையை சம்��ாதிக்க ஒரு மனிதன் வேறு ஊர்களுக்குப் பஞ்சம் பிழைக்க போகவேண்டியிருப்பதை துரதிர்ஷ்டமென்றுதான் சொல்லவேண்டும்.// இது நிச்சயமாக சாபமென்றுதான் கூறவேண்டும். //வெறுப்பதை விடவும் ஒருவரை நேசித்தல் எளிது, தன்னால் நேசிக்கவே முடியாதென மனம் சொல்லும் போது அமைதியாக ஒதுங்கிச் செல்லுதல் அதனினும் எளிது.// நமக்கு பிடிக்காதவர்களை அல்லது எதிரிகளை ஒதுங்கிச்செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன்.
சில சந்தேகங்கள்:
ஒரு இஸ்லாமிய பெண்ணிடம் , இந்து ஆணிடம் அவ்வளவு எளிதாக கழக இந்த சமூக அமைப்பு இடமளிக்கின்றதா.?
பருவ வயதையடைந்த ஆணின் தலையை கோதிவிடவோ, அல்லது அவனின் நெற்றியில் முத்தமிடவோ இந்த சமூகம் அனுமதிக்கின்றதா.? அதுவும் தன்னைவிட வெறும் ஏழெட்டு வயது இளையவனை.!
ஜோதி சிறியவனிலிருந்து வாலிபனானதிற்கும் உள்ள கால விகிதம், ராபியா திருமணமானதிலிருந்து முதல் குழந்தை பிறந்ததற்குமுள்ள கால விகிதத்திற்கும் இடையே எங்கேயோ தவறாக உள்ளது என நினைக்கிறேன்.
அந்த விலைமாது இவனை “தம்பி உடம்பு சரியில்லையா.?” என்று கேட்ட கேள்வியில் அவனின் கெட்ட ஆன்மா மொத்தமாக மாய்ந்திருக்க வேண்டும். ஆனால், முதல்முறையாக கூடலில் கலந்திருக்கிறான் அது அவனை போதைபோல எடுத்துச்செல்லவில்லை என்பது ஆச்சர்யம்தான்.
சில இடங்களில் மரகத நாணயம் படத்தின் காட்சிகள் நினைவுகளில் வந்ததை தவிர்க்க முடியவில்லை.
மிகவும் இரசித்து இரசித்து படித்தேன், இந்த நாவலைபற்றி பேச நிறைய உள்ளது, நேரில் சந்தர்ப்பம் அமைந்தால் சந்திக்கலாம்.
லஷ்மி தமிழில் தவிர்க்கமுடியாத ஒரு படைப்பாளி, நவீன எழுத்தாளர்கள் இதுபோல் அமைவது தமிழிக்கு கிடைக்கப்பெற்ற வரமென்றுதான் நான் கூறுவேன்.
நல்லாயிருய்யா ❤️
தமிழ். -
முதல் சில அத்தியாயங்கள் சரியாக பிடிபடவில்லை. ஏதோ மொழிபெயர்ப்பு நூலை வாசிப்பது போன்ற தோற்றமேற்பட்டது. கதை எந்த வருடம் நடக்கிறது, எந்த ஊரில் நடக்கிறது, ஏதாவது அராபியக் கதையா என்றெல்லாம் குழப்பமாக இருந்தது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக கதைமாந்தர்களும், கதை நடக்கும் சூழலும் நாவலோடு ஒரு பிணைப்பை ஏற்படுத்தினார்கள்.
அன்பை மட்டுமே வாரி வாரி வழங்கிடும் ராபியாவும், இச்சை - சுய கழிவிரக்கம் - வெறுப்பு - வன்மம் என பல்வேறு இன்னல்களுக்கு இடையில் மாட்டிக்கொண்டு வெளி வர வழி தெரியாமல் சிக்கித்தவிக்கும் ஜோதி, சுகவாசியாய் சுற்றித் திரிந்து பிறகு பொறுப்பான பிள்ளையாகவும் அன்பான கணவனாகவும் இருந்து ஏமாற்றம் தந்த வலியில் குடிக்கு அடிமையாகி தன்னை வருத்திக் கொள்ளும் அன்வர் என கதைக்குள் வரும் சின்ன சின்ன கதாபாத்திரங்களும் அப்படியே நினைவில் நிற்கிறார்கள். ராபியா குறித்தான வர்ணனைகளும் உரையாடலும் அமைதியாக ஓடும் ஆறாக இருந்தால், ஜோதி குறித்தான அனைத்தும் கரைபுரண்டு ஓடும் காட்டாறாய் இருக்கிறது. அத்தனை உக்கிரமான எழுத்து. லக்ஷ்மி சரவணக்குமரின் "கானகன்", "நீலப்படம்" இரண்டும் இதற்கு முன்பு வாசித்திருக்கிறேன். இப்படியான ஒரு உக்கிரமான எழுத்தினை இரண்டிலும் வாசித்ததாக எனக்கு நினைவில்லை. ஒரு வேளை நான் கவனிக்கத் தவறியிருக்கலாம்.
ஒவ்வொரு அத்தியங்களையும் அத்தனை ஆசையோடும், ஆர்வத்தோடும் படித்து முடித்தேன். வாசித்துக் கொண்டிருக்கும் போதே முகநூலில் ஒரு பதிவு போட்டு லக்ஷ்மி சரவணக்குமாரை பாராட்ட வேண்டுமென்ற என் முந்திரிகோட்டைத் தனத்தை அடக்கிக் கொண்டே புத்தகத்தை முடித்தேன்.
ரூஹ் - ஒரு பேரனுபவம். -
மொக்கை கதைகளும், தகாத வார்த்தைகள் திணிக்கப்பட்ட இது போன்ற கதைகள், நூல்களை வாங்கி தமிழ் எழுத்தாளர்களை ஆதரிக்க வேண்டுமென்கிற எண்ணத்தை குறைக்கின்றன. காசு கொடுத்து பார்த்த திரைப்படம் படு மொக்கையாக இருந்தால் அந்த இயக்குனரின் மீது வரும் அதே வெறுப்பு.
வித்தியாசமான பெயர் தான் இழுத்தது. General fiction, இதில் தகாத வார்த்தைகளுக்கு என்ன அவசியம் என்று புரியவில்லை. நாகரிகமற்ற எழுத்தறிவில்லாத மக்கள் என்றால் அவர்கள் எல்லோரும் இப்படித்தான் பேசிக்கொண்டு வாழ்கிறார்களா? அப்படியெனில் கோவிலுக்கு பின்னிருந்து சேலையை சரி செய்துக்கொண்டு ஒரு பெண்ணும் லுங்கியை சரி செய்துக்கொண்டு ஒரு ஆணும் வந்தார்கள் என்பதை விரிவாக சொல்லி இருக்கலாமே?
துறைமுகத்தில் இந்திய முகங்கள் (ஆனால் கப்பலில் மராத்தி கொடி)... இந்தியாவிடமிருந்து கொண்டு வரப்பட்ட... - இந்தியா என்ற ஒரு நாடே இல்லாத காலக்கட்டத்திலா?
பல வருடங்களுக்கு முன் இந்து மன்னர்களும்... - இந்து என்ற மதம் எப்போது எப்படி தோன்றியது என்று கூட தெரியாதா?
செருப்பு அணிவது ஆடம்பரம்... சிலிண்டரை மலை மேல் கொண்டு செல்ல 300 ரூபாய் (ஒரு ஆணாலையே சுமந்து செல்ல புடியுமா?)...கதை எந்த காலக்கட்டத்தில் நடக்கிறது என்ற குழப்பம் இருந்தது.
மஞ்சள் முகம் கொண்ட சீனக்குள்ளர்கள்... - குள்ளர்கள் தேவையில்லாத ஆணி.
வேறு ஊருக்கு பஞ்சம் பிழைக்க போனால் தான் சொந்த ஊர்காரர்கள் மரியாதை தருவார்களா? -
லட்சுமி சரவணகுமார் அவர்களுக்கு நன்றி, கதையோடு இறுதிவரை சுவாரஸ்யமாக வாசகனை கொண்டு சென்றதற்கு.
தொடக்கத்தில் சிறிது மெதுவாக நகர்ந்தாலும், பின்னர் ஜோதி மற்றும் ராபியாவின் ஆளுமை என்னை மிகவும் உத்வேகப்படுத்தியது.
ஒருவரை பற்றி தெரிந்து அவரிடம் அன்பு காட்டுவதை உடைத்து எரிந்தது ராபியாவின் பண்பு.
ஜோதியின் மனமாற்றம் ஆண்களின் உண்மை மனசாட்சி���ை தூண்டியது.
இந்த புத்தகத்தின் முலம் எனக்கு சுபி இசையின் அறிமுகம் கிடைத்தது.என்னடைய கைபேசியேன் இசை தொகுப்பில் அதுவும் ஒன்றாக இப்போது இருக்கின்றன.
படித்த பின் கண்டிப்பாக மனதில் ஒரு வெறுமயினை
அகற்றி நல்ல எண்ணங்களை கண்டிப்பாக இந்த புத்தகம் நிரப்பி உள்ளது.
நன்றி. -
The novel is complete of it's own. Lakshmi Saravanakumar is a brilliant narrator as he is obtaining his sources for writing from his real life. The characters in his novel talks to you. You have been transported into the setup of the novel unconsciously. Thats the victory of the author and shows the fullness of the creation. Love is the ultimate thing that humans are ever blessed with, thats what the novel makes you realize. The narrative style keeps you engaged and at the end you may feel the bliss.
-
கடலில் கலக்கிற உப நதிகள்.
சமீபத்தில் வாசித்த நாவல்களில் மனதிற்கு மிக நெருக்கமாய் உணர்ந்த நாவல்..பிடித்த வரிகளை அடிக்கோடிடுகிற பழக்கமுண்டு.நாவலை வாசித்து முடித்துப்பார்த்தால் புத்தகம் நிறைய அடிக்கோடுகள். எனக்குப்பிடித்த பாவ்லோ கொய்லோவின் சஹீர் நாவலை வாசித்தபோது உருவான அதே.உணர்வு. மதினா கப்பலில் கடலோடியாக இருக்கும் அஹ்மத்தின் அத்தியாயங்கள் உலகதரம்.its a fantastic novel ..Must read !!!