Mul Munaiyil Mukilaa (Tamil Edition) by Rajesh Kumar


Mul Munaiyil Mukilaa (Tamil Edition)
Title : Mul Munaiyil Mukilaa (Tamil Edition)
Author :
Rating :
ISBN : -
Language : Tamil
Format Type : Kindle Edition
Number of Pages : 75
Publication : Published February 12, 2019

Thriller Based Fiction Written By Rajeshkumar. விபரீத விஞ்ஞான முயற்சியில் ஈடுபடும் ஒரு சமூக விரோத கும்பலிடம் மாட்டிக்கொள்ளும் கதையின் நாயகி அங்கிருந்து எப்படி தப்பிக்கிறாள் என்பதே கதைக்கரு


Mul Munaiyil Mukilaa (Tamil Edition) Reviews


  • Priyadarsini

    விபரீத அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதர்களைப் பலிவாங்காமல் நிகழ்வதேயில்லை.

    குரங்கின் உயிரணுக்களையும் மனித உயிரணுக்களையும் சேர்த்துப் புதியதாக அறிவுஜீவியான குரங்கை பிரசவிக்க முடியும் என்பதைக் காட்ட சுகிர் என்ற விலங்கை புரபசர் யதுவந்தனிடம் காட்டி அவரின் பேராசையை இருவர் தூண்டிவிட, சினிமாவில் குரூப் டான்சராக இருக்கும் பத்து பெண்களைக் கடத்தி வந்து குரங்கின் உயிரணுக்களையும் செலுத்த முயலும் போது எதிர்பாராமல் கடத்தப்பட்ட கும்பலில் சினிமா இயக்குனரின் மகள் முகிலா மாட்டிக்கொள்ளப் புத்திசாலித்தனமாக புரபசர் கும்பலை அடக்கி தங்களை அடைத்து வைத்திருக்கும் பகுதியை போலீஸிடம் தெரியப்படுத்திவிடுகிறாள்.

    முகிலாவின் அப்பாவிற்கு முன்பு இருந்த பெண் தொடர்பு மூலம் பிறந்த பெண்ணான யமுனாவும் அந்தக் கும்பலில் மாட்டியிருக்க மறைத்து வைத்திருந்த உண்மை வெளிவருகிறது. அவளைத் தன் மகள் என ஒத்துக்கொள்கிறார்.