Title | : | Vivek, Vishnu Konjam Vibareedham |
Author | : | |
Rating | : | |
ISBN | : | - |
Format Type | : | Kindle Edition |
Number of Pages | : | - |
Publication | : | Published June 28, 2018 |
Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.
Vivek, Vishnu Konjam Vibareedham Reviews
-
எதிர்பார்த்ததை போல பல புதிய தகவல்களை தந்திருக்கிறார். வெளிநாட்டு எழுத்தாளர்களை போல அதிகமாக research செய்வார் போல. ஆனால் அந்தளவு விறுவிறுப்பாக இல்லை. விவேகிற்கு அவ்வளவு திறமை இருக்கும் போது அதற்கு சமமான வில்லன் இல்லாதது பெரிய குறை.
- பரத்தத்திற்கும், மவுனம், விடாமே என்று அங்கொன்றும் இங்கொன்றுமாக தட்டச்சுப் பிழைகள்.
- வெளிநாட்டுப் பயணிகளாய் இருந்ததால் விசா மட்டும் தானே ஒரு நாட்டினால் ரத்து செய்ய முடியும், கடவுச்சீட்டை எப்படி ரத்து செய்ய முடியும்?
- இக்காலத்தில் தினமலர் படிப்பவர் சங்கியாகத் தானே இருப்பார்?
- ஒருவரை விசாரிக்கும் போது, இன்னொருவர் வீட்டை சோதனை செய்தோம் என்பதை சொன்னால் போதாதா? யார் சோதனை செய்தார், எப்போது சோதனை செய்தார் என்றெல்லாம் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கா?
- தலை புதைக்கும் போது பையில் வைத்து புதைக்கப் பட்டதா, இல்லை அப்படியே புதைக்கப் பட்டதா?
- நைஜீரியாவை சேர்ந்தவரை கரியைப் பூசிக் கொண்டதை போல என்று விவரிப்பதை தவிர்த்திருக்கலாம்.
- டி ஜி பி மூலமாக அழுத்தம் கொடுக்கலாம் என்று காவல்த்துறை அதிகாரி சொல்ல, விவேக் தன்னிடம் ஒரு வழி இருக்கு என்று சொல்லி அதையே சொல்வது?
- விஷ்ணு நாம தோற்கப் போகிறோம் என்று சொல்லும் போது ஒரு பதட்டம் வருமே அது ஒரு சதவீதம் கூட வரவில்லை.
- பல இடங்களில் சில நிகழ்வுகள், சில வாக்கியங்களை திரும்பப் படிப்பது போல் உள்ளது. -
One of the best
One of the best novel from the best crime writter Rajesh kumar, excellent one . I loved this... Awaiting more like this