Title | : | Nanthanin Meera | நந்தனின் மீரா (Tamil Novels) (Tamil Edition) |
Author | : | |
Rating | : | |
ISBN | : | - |
Language | : | Tamil |
Format Type | : | Kindle Edition |
Number of Pages | : | 292 |
Publication | : | Published May 30, 2018 |
" இல்லை வேண்டாம் .நான் பெரிய பெண்ணாக வேண்டாம் .சின்ன பிள்ளையாகவே இருந்துவிட்டு போகிறேன் .இந்த வலியும் , வேதனையும் மட்டும் எனக்கு வேண்டாம் ..." கத்தினாள் திவ்யா . " நீ சின்ன பிள்ளையாகவே இருந்தாயானால் எப்படி நிறைய படிப்பாய் ...? பெரிய வேலைக்கெல்லாம் போய் உன் அம்மாவை காப்பாற்றுவாய் ...? ...." நந்தகுமாரனின் குரல் கேட்டதும் திவ்யா இன்னமும் கொஞ்சம் தன்னை மீராவினுள் குறுக்கினாள் . இந்த சூழ்நிலையில் ஒரு ஆணை சந்திக்க கூசும் அவளது பெண்மையை புரிந்துகொண்ட மீரா ... " நீங்கள் கொஞ்சம் வெளியே இருங்கள் .நான் பேசிக்கொள்கிறேன் ..." என்றாள் . ஆனால் அவன் நகராமல் " ஏன் ...? " என்றான் . " ஏன்னா.... இப்போது அவளுக்கு கூச்சமாக இருக்காதா ...? " கோபமாக கேட்டாள் .