Pudhidhu Pudhidhu Kutram Pudhidhu (Crime Novel) by Rajeshkumar


Pudhidhu Pudhidhu Kutram Pudhidhu (Crime Novel)
Title : Pudhidhu Pudhidhu Kutram Pudhidhu (Crime Novel)
Author :
Rating :
ISBN : -
Format Type : Kindle Edition
Number of Pages : 72
Publication : Published February 23, 2018

Thriller Based Fiction Written By Rajeshkumar


Pudhidhu Pudhidhu Kutram Pudhidhu (Crime Novel) Reviews


  • Priyadarsini

    மறைக்கப்படும் உண்மைகளே புதுக் குற்றத்தின் திறவுகோல்.

    முன்னணி நடிகை ஊர்மிளாவிடம் இருந்து பணத்தைப் பிடுங்க இருவர் திட்டம் தீட்டி அதில் வெற்றியும் காண்கின்றனர்.

    பணம் கிடைத்தவுடன் ஊர்மிளாவை விட்டு சென்று விடுகின்றனர், ஆனால் மறுநாள் அவளின் பிணம் தான் கிடைக்கிறது.

    முன்னனி கதாநாயகனான கௌரவ்குமார் யாருக்கும் தெரியாமல் ஊர்மிளாவை மணந்ததால் அவனின் மனைவி கல்பனா தான் கொலை செய்து இருப்பார்களோ என்ற சந்தேகமும் எழுகிறது.

    கண்ணில் படும் அழகியை எல்லாம் வளைத்து போடும் கௌரவ்குமார் அதுபோலவே நடிகை நட்சத்திராவை வளைத்து போட்ட பிறகே தன்னை விட வயதில் அவள் பெரியபெண் என்று தெரிந்து கழட்டிவிட்டு ஊர்மிளாவிடம் உறவை வளர்த்ததைப் பொறுக்க முடியாமல் அவளை நட்சத்திரா கொன்றது தெரியவருகிறது.

    இந்த அதிர்ச்சி கௌரவ்குமாரின் சபலத்தை முற்றிலும் அவனிடம் துரத்திவிடுகிறது.